கொரோனோ நிலவரம் | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,488 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 10,488 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 313 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை ஆனது 4,65,662 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 12,329 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.30 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 116 கோடியைக் கடந்து இருக்கிறது. கடந்த சனிக்கிழமையான நேற்று மட்டும் 60.25 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு உள்ளனர்.

“ இந்தியாவில் 100 பேருக்கு தலா 86.54 பேர் தானாகவே முன் வந்து முதல் தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொள்ள முயல்கின்றனர் ”

About Author