கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 21 12 2021

Corona Updates In India 21 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 453 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,78,007 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 8,043 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.4 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 139 கோடி என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறது. நாட்டில் கிட்ட தட்ட 65 சதவிகிதம் பேர் குறைந்த பட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

“ தடுப்பூசி விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒமிக்ரான் பரவலின் விகிதமும் வெகுவாக குறைந்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை விடுத்து இருக்கிறது. ஆதலால் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் தற்காத்துக் கொள்ளவாவது உடனடியாக எடுத்துக்கொள்ளுங்கள் “

About Author