கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 318 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,78,325 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 6,906 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 140 கோடியை நெருங்கி இருக்கிறது. இந்தியாவில் 62.4 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொண்டுள்ளனர்.

“ உலகளாவிய அளவில் பெருகி வரும் ஒமிக்ரான் தொற்றால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. தொற்றையும் சமாளிக்க முடியாமல், ஊரடங்கையும் தொடர்ந்து அமல் படுத்த முடியாமல் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் “

About Author