கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,994 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 23 10 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,994 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,994 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 4 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,961 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 25,432 ஆக குறைந்து இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2,601 பேர் தொற்றில் இருந்து பூரண குணம் அடைந்து இருக்கின்றனர். “