கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 323 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,79,133 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,051 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதம் 98.40 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 140.31 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் 62.4 சதவிகிதம் பேர் குறைந்த பட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

“ டெல்டா வகை படிப்படியாக குறைந்து வரும் வேளையில், ஒமிக்ரான் தொற்று ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author