கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,189 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 25 12 2021

Corona Updates In India 25 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,189 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 387 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,79,520 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 7,286 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். ஒட்டு மொத்த மீட்பு விகிதம் இந்தியாவில் 98.41 சதவிகிதமாக இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 141.01 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தேசத்தில் 62.7 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

“ தடுப்பூசி உபயோகத்தின் மூலம் நோயைத் தடுக்க முடியாது என்ற காரணிகள் ஒரு புறம் பேசப்பட்டு வந்தாலும், ஒரு நாட்டில் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பூசி பெருமளவில் குறைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை “

About Author