கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,987 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,987 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 162 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,79,682 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 7,091 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதம் 98.40 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 141.37 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தேசத்தில் 64 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

“ ஒமிக்ரான் பரவல் 500-யை நெருங்கி இருக்கும் வேளையில், ஆங்காங்கே ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. இது ஒட்டு மொத்த ஊரடங்குக்கு வழி வகுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “

About Author