கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் நேற்று மட்டும் 2,86,384 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது’

Corona Updates In India 27 01 2022

Corona Updates In India 27 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.86 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,86,384 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 573 பேர் தொற்றுக்கு தேசத்தில் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,91,700 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ கொரோனா தொற்றினால் சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை 22,02,472 ஆக இருக்கிறது. மீட்பு விகிதம் தேசத்தில் 93.23 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது “

About Author