கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,531 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!
Corona Updates In India 27 12 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,531 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 315 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,79,448 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 7,141 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.40 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 141.70 கோடி என்ற இலக்கை அடைந்து இருக்கிறது. தினசரி பாதிப்பு விகிதமும் 0.87 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது.
“ டெல்டா வகை குறைய குறைய இன்னொரு பக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது ஒமிக்ரான் வகை தொற்று, மத்திய அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்ட கோவிட் வார் ரூம்ஸ் மறுபடியும் ஓபன் ஆகிறது “