கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 8,774 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 28 11 2021

Corona Updates In India 28 11 2021

இந்தியாவில் கடந்த 24 மனி நேரத்தில் 8,774 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 621 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,68,554 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 9,481 பேர் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் 121 கோடியை கடந்து இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. அதாவது இந்தியாவில் 100 பேருக்கு தலா 90.83 பேர் குறைந்த பட்சம் ஒரு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

“ ஒரு கொரோனோ ஓய்வதற்கு முன் தென் ஆப்பிரிக்காவிலிருந்து புதிய வகை ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளுக்கு பரவி வருவதாக அடுத்த அதிர்ச்சிகர செய்து ஒன்று கிளம்பி வருகிறது. அது எவ்வளவு தீவிரமானது என்பது பொறுத்து இருந்து தான் தெரிய வருமாம் “

About Author