கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!
Corona Updates In India 30 12 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 268 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,80,860 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 7,486 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 143 கோடியை எட்டி இருக்கிறது. தேசத்தில் 63.9 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
“ ஒமிக்ரான் தொற்றும் கிட்ட தட்ட இந்தியாவில் ஆயிரத்தை நெருங்கி இருப்பதால் இந்தியாவில் ஆங்காங்கே பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது “