மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, பாதிப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்து இருக்கிறது!
Corona Virus Cases Increased To 10000 28 03 23 Idamporul
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது.
ஒரு வழியாக ஓய்கிறது என்று நினைத்தால், நாயகன் மீண்டும் வர்றான் என்பது போல மீண்டும் மீண்டும் வந்து மக்களை அச்சுருத்திக் கொண்டு இருக்கிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10,000-யை கடந்து இருப்பதால் மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த சொல்லி எச்சரித்து இருக்கிறது.
“ கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பதால், பரிசோதனைகளையும் அதிகரிக்க சொல்லி மத்திய அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது “