கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,466 பேருக்கு புதியதாக தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 460 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தேசத்தில் 4,61,849 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 11,961 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீட்பு விகிதமும் இந்தியாவில் 98.25 சதவிகிதம் என்ற உச்சநிலையில் தான் இருக்கிறது. இந்தியாவில் தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை அது 109.63 கோடியாக இருக்கிறது. தேசத்தில் 100 பேருக்கு தலா 81.63 பேர் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.
“ இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவி ஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 96 நாடுகள் அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது “