கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,018 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,018 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் கொரோனோ தொற்றுக்கு 193 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,50,814 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 21,583 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 95 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 70.75 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். குறைந்த பட்சம் ஒரு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் விகிதம் தேசத்தில் 52 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது.
“ மீட்பு விகிதம் தேசத்தில் கடந்த 8 மாதங்களுக்கு பிறகு பெரிதளவில் உயர்ந்திருக்கிறது. புதிய பாதிப்பு விகிதமும் தேசத்தில் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்த செயல்பாடுகளை தொடர்ந்து செயல்படுத்தி வந்தால் மூன்றாவது அலையை எதிர்கொள்வது என்பது தேசத்துக்கு நிச்சயம் இலகுவாகும். ”