கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 17,004 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 15 10 2021
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 17,004 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 378 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,51,847 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 19,388 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 98 கோடியை நெருங்கி உள்ளது. இந்த வார இறுதியில் எப்படியும் தடுப்பூசி உபயோகம் 100 கோடியை தொட்டு விடும். இந்தியாவில் 100 பேருக்கு தலா 72.46 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.
“ ஆங்காங்கே உயர்ந்தும் சரிந்தும் வரும் இந்த தொற்றினை முழுமையாக ஒழிப்பதற்கு ஒரே வழி அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது மட்டுமே. ஆதலாம் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்டு, இந்த தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் உங்கள் பங்கினையும் இந்த தேசத்திற்கு அளித்திடுங்கள் “