குழந்தைகளுக்கும் செயல்படுத்த பட உள்ளதா கோவேக்சின் தடுப்பூசி?
Covaxin Vaccine For Children Waiting For DGCI Approval
2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி, செயல்பாட்டுக்கு வர இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்து வரும் கோவேக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கும் பயன்படுத்தும் ஆய்வுகள், கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது அதன் முடிவுகள் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைப்பின் கோவேக்சின் குழந்தைகளுக்கும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
“ நாட்டில் ஒட்டு மொத்தமாக கொரோனோ சூழலை தகர்க்க வேண்டும் எனில் அனைவருக்குமான தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும். தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசி உபயோகத்தையும் துவங்கி விட்டால் விரைவில் கொரோனோ சூழலை நாட்டிலிருந்து அகற்றி விட முடியும் என்பதே மருத்துவ வல்லுநர்களின் கருத்து “