சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக நடக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு 10 ஆவது இடம்!
சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளாவிய அளவில் நடக்கும் நாடுகளில், இந்தியாவிற்கு 10 ஆவது இடம் என உலகளாவிய தரவுகள் தகவல் விடுத்து இருக்கிறது.
சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் முறைகேடுகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியல் ஒன்றை உலகளாவிய தரவுகளை தரும் ஒரு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில் ரஷ்யா, உக்ரைன், சீனா உள்ளிட்ட நாடுகள் முதல் மூன்று இடத்திலும், இந்தியா 10 ஆவது இடத்திலும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ இணையத்தில் உலவி வரும் ஏமாற்ற வலையில் தற்போதெல்லாம் மக்கள் எளிதாக சிக்கி விடுவதாக தெரிகிறது, பேராசைகள் என்றும் பெரும் நஷ்டத்தில் தான் முடியும், உழைப்பு மட்டுமே என்றும் உங்களுக்கானதை தரும் என்பதை உணர்ந்து கொண்டு இணையத்தின் அதிர்ஷ்டங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்து இருக்கின்றனர் சைபர் கிரைம் துறையினர் “