தமிழகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாஸ்க் மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டு இருக்கிறது!
Mask Is Mandatory In Various States
கொரோனா தொற்று மெல்ல மெல்ல உயர்ந்து வரும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கட்டாயம் ஆக்கப் பட்டு இருக்கிறது.
தினசரி கொரோனா தொற்று தேசத்தில் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் நிலையில், பெருந்தொற்றின் விளைவில் இருந்து மக்களை காக்கவும், பரவலை தடுக்கவும் தமிழகம், உத்திர பிரதேசம், டெல்லி, மஹாராஸ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் முக கவசம் கட்டாயம் ஆக்கப் பட்டு இருக்கிறது.
“ இன்னும் எத்தனை எத்தனை அலைகளை தான் தேசம் சந்திக்க வேண்டி வருமோ தெரியவில்லை. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு முறை உருமாறிக் கொண்டே இருக்கிறது கொரோனா “