தேசத்தில் 85 % இளைஞர்கள் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர் – சுகாதாரத்துறை
Vaccination For Adults Reached 85 Percent In India
ஒட்டு மொத்த தேசத்தில் 85 சதவிகிதம் இளைஞர்கள் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 185.38 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இன்று 2:30 மணி நிலவரப்படி 9.66 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இது போக தேசத்தில் 85 சதவிகிதம் இளைஞர்கள் முழுமையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
“ அடுத்ததாக ’எக்ஸ்-இ’ வகை கொரோனா பெரும்பாலான வெளிநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. வெகு விரைவில் இந்தியாவிலும் அது கண்டறியப்படலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர் “