’வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழைப்பொழிவு ஆரம்பம் ஆகும்’ – வானிலை ஆய்வு மையம்
கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இதன் தாக்கம் படிப்படியாக குறைந்து விரைவில் சுழற்சி முறையில் ஆங்காங்கே மழைபொழியும் என வானிலை ஆய்வு மையம் கருத்து தெரிவித்து இருக்கிறது.
அக்னி நட்சத்திரம் நேற்று தான் ஆரம்பித்த நிலையில், வெயிலின் தாக்கம் இன்னும் சற்று அதிகரித்து இருக்கிறது. சராசரி வெயிலின் அளவு கிட்ட தட்ட 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருக்கிறது. கூடிய விரைவில் இந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பொழிய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
” சாரல் மழை விழுந்தாலும் மக்களுக்கு சந்தோஷமே, அப்படி ஒரு கத்திரி வெயில் தான் மக்களை வாட்டி வதைத்து வருகிறது “