கொட்டி தீர்க்கும் மழை, மிதக்கும் மஹாராஸ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள்!
Heavy Rainfall In Northen States
வட மாநிலங்களில் மழைப்பொழிவு கொட்டி தீர்ப்பதால் பெரும்பாலான நகரங்கள் நீரில் மிதந்து வருகின்றன.
மஹாராஸ்டிரா, குஜராத், உத்தரகண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான நகரங்கள் நீரில் மிதந்து வருகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதித்து இருக்கிறது. குஜராத்தில் மட்டும் 7 பேர் பெரும் வெள்ளத்திற்கு இறந்திருப்பதாக தகவல்.
“ கணிக்க முடியாத மழைப்பொழிவு என்பது எல்லாம் இப்போது சாதாரணமாகி விட்டது, கால சூழல் மாற்றம், புவி வெப்பமயமாதல் இந்த இரண்டும் தான் இத்தகைய சூழலுக்கு காரணம் என்று சுற்று சூழல் அறிவியலார்கள் கருத்து தெரிவிக்கின்றனர் “