விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் சர்ச்சை, மாணவர்கள் அமைதி காக்க கோரிக்கை விடுத்த நீதிமன்றம்!
Karnataka Hijab Ban Issue Karanataka High Court Take Hearing
கர்நாடகாவில் தொடர்ந்து ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மாணவர்கள் அமைதி காக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்து இருக்கிறது.
கர்நாடகாவின் ஒரு சில பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக நீதிமன்றத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்கு பதிவாகவே இன்று அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. மாணவர்கள் இந்த பிரச்சினையை பூதாகரமாய் ஆக்காமல் அமைதி காக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்து நாளை விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறது.
“ ஹிஜாப், காவி துண்டு, நீல துண்டு என்று இந்தபிரச்சினை நீண்டு கொண்டே சென்று கொண்டு இருக்கிறது. ஒரு சிறு பிரச்சினையை மதரீதியில் எப்படி தூண்டி விடுவது என்று எதிர்பார்த்தே ஒரு சில கட்சிகல் அரசியல் செய்வதாக இணையவாசிகள் கொந்தளித்து பதிவிடுகின்றனர் “