இமாச்சலில் நிலச்சரிவு, ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலி!
Land Slide In Himachal 51 Dead Many Injured 15 08 2023 Idamporul
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவினால் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். பலரும் காயமுற்று இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் பள்ளி, கல்லுரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையால் இமாச்சலில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி கிடக்கிறது. மொத்த மீட்பு குழுவும் இமாச்சலில் தான் இருக்கிறது ஆனாலும் கூட மழை காரணமாக மீட்பு பணிகளும் முடங்கி கிடக்கின்றன.
“ மோசமான மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, இமாச்சலில் உள்ள அனைத்து தரைவழி போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட 750-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது “