தேன் நிலவு சுற்றுலாவை அயோத்தி ஆன்மீக சுற்றுலாவாக மாற்றியதாக, கணவரிடம் விவாகரத்து கேட்டு நிற்கும் மனைவி!
தேன் நிலவுக்கு கூட்டிச் செல்கிறேன் என கூறி கணவர், அயோத்தி கோவில் திறப்பு விழாவிற்கு கூட்டி சென்றதாக மனைவி ஒருவர் கணவரிடம் விவாகரத்து கேட்டு இருக்கிறார்.
தேன் நிலவிற்கு கோவா, கேரளா உள்ளிட்ட தென் இந்திய சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம் என மனைவியிடம் கூறிவிட்டு, அம்மாவின் கட்டளைக்கு இணங்கி அயோத்தி திறப்பு விழாவிற்கு கூட்டி சென்றதால், மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்ட சம்பவம் ஒன்று போபாலில் அரங்கேறி இருக்கிறது.
“ புறாவுக்கெல்லாம் போரா, பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது என்பது போல, தேன்நிலவு டூரை அயோத்தி ஆன்மீக டூராக மாற்றி அமைத்த கணவருக்கு வீட்டிற்கு திரும்பி சென்றதும் பெரிய ஆப்பு வைத்து இருக்கிறார் போபால் பெண்மணி “