என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நானே என்னை தூக்கிலிட்டு கொள்கிறேன் – பூஷன் சிங்
I Will Hang My Self If Allegations Are Proven Brij Bhushan Singh Idamporul
என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நிச்சயம் நானே என்னை தூக்கிலிட்டு கொள்வேன் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் பேட்டி அளித்து இருக்கிறார்.
பாஜக எம்பி மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மல்யுத்த வீர, வீராங்கனைகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பூஷன் சிங், என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் என்னை நானே தூக்கிட்டு கொள்கிறேன், முதலில் நிரூபியுங்கள் என பேட்டி அளித்து இருக்கிறார்.
“ தாங்கள் அரும்பாடு பட்டு வாங்கிய பதக்கங்களை தூக்கி எறியும் அளவிற்கு, வீர வீராங்கனைகள் துணிந்து இருக்கிறார்கள் எனில் நிச்சயம் அவர்களது இந்த போராட்டத்தில் உண்மை இருக்கவே செய்யும் என இணையவாசிகள் தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர் “