அரசுப் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை?
அரசுப்பணிகளுக்கான தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை என புதிய மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளுக்காக தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வில் முறைகேடு செய்து கண்டு பிடிக்கப்பட்டால், 1 கோடி அபராதமும், 10 ஆண்டு சிறையும் விதிக்கப்படும் வகையில் புதிய மசோதோ ஒன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, புதிய விதிமுறைகளை வகுக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக புதிய குழு ஒன்றை அமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது “