இந்தியாவில் ஒமிக்ரான் தீவிரமடைந்தால் தினசரி பாதிப்பு 15 லட்சமாக பெருகும் – டாக்டர் வி.கே.பால்
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு தீவிரமடைந்தால், தினசரி ஒமிக்ரான் பாதிப்பு 14 முதல் 15 லட்சம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக டாக்டர் வி.கே.பால் தெரிவித்து இருக்கிறார்.
பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் மூன்றாவது அலை ஆரம்பித்து தினசரி ஒமிக்ரான் பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டி இருக்கிறது. இதே ஒமிக்ரான் இந்தியாவில் தீவிரமடைந்தால் தினசரி பாதிப்பு 14 முதல் 15 லட்சம் வரை பெருகக் கூடும் என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் எச்சரித்து இருக்கிறார்.
” தற்போது வரை இந்தியாவில் 113 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது தினசரி உயர்ந்து வருவதால், மேலை நாடுகளைப் போல இந்தியாவும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது “