ஆள் மாறாட்டம், வினாத்தாள் லீக் – மோசடிகளின் கூடாரம் ஆகிறதா நீட்!
நடந்து முடிந்த நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள்கள் லீக் செய்யப்பட்டுள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மொழிந்து வருகின்றனர்.
நாக்பூரை சேர்ந்த தனியார் பயிற்சி மையம் ஒன்று நீட் ஆள்மாறாட்டத்திற்கு பல்வேறு மாணவர்களுக்கு துணை புரிந்ததாகாவும், மேலும் ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள்கள் 35 லட்சத்திற்கு விற்கப்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. மத்திய புலனாய்வு துறையும் பயிற்சி மையத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
ஆள்மாறாட்டத்திற்கு 50 லட்சம், வினாத்தாளுக்கு 35 லட்சம் என்று பேரம் பேசப்பட்டு நீட் மோசடிகள் வருடம் வருடம் நடைபெற்று வருவதாகவே பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் மத்திய அரசு மருத்துவத்தின் தரத்தை உயர்த்தவும், மருத்துவ சேர்க்கையில் மாநிலங்களில் நடைபெறும் முறைகேடுகளை களையவுமே நீட் கொண்டு வரப்பட்டதாக சொல்லி இருந்தது. ஆனால் தற்போது அந்த நீட் தேர்வுகளே மோசடிகளின் கூடாரமாக மாறி உள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.
தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையின் படி நீட் கொண்டு வரப்பட்டத்திலிருந்து மாநில அரசுகளின் கீழ் படிக்கும் மாணவர்களின் உரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்டு, மத்திய அரசுகளின் கீழ் படிக்கும் மாணவர்களே அதிகம் இந்த நீட் தேர்வில் தேர்வு பெற்று மருத்துவ சேர்க்கையில் சேர்வதாக ஆதாரப்பூர்வத்துடன் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
“ ஒரு பக்கம் மோசடிகள், இன்னொரு பக்கம் மாநில கல்வி படிக்கும் மாணவர்களின் உரிமை பறி போகிறது, இதனை கருத்தில் கொண்டே தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக கொடிப்பிடித்து வருகின்றன “