மத கலவரங்களால் ஸ்தம்பிக்கும் இந்தியா, சர்வதேச அளவில் இந்தியா தலைகுனியும் அவலம்!
தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்றுவரும் மதகலவரங்களால் இந்தியா சர்வதேச அளவில் தலைகுனியும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது.
மணிப்பூர் கலவரம், தற்போது ஹரியானாவில் மதக்கலவரம் என்று இந்தியாவில் ஆளும் ஒன்றிய அரசின் கீழ் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் மத ரீதியான கலவரங்கள் பெருகிவருகிறது. இதனால் சர்வதேச அளவிலும், சர்வதேச மேடைகளிலும் இந்தியா எதையும் பேச முடியாத அளவிற்கு தலைகுனியும் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.
ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஒருசாரருக்கும் மட்டும் ஆதரவாக இருந்து விட்டு கலவரத்தை அடக்க முயற்சி கொள்ளாமால், கலவரக்காரர்களை அணைத்துக் கொள்வதன் விளைவு அவர்களுக்கு அது இன்னும் மேலும் பல கலவரங்களை தூண்டும் தைரியங்களை கொடுப்பதாக அமைகிறது.
“ ஒன்றிய அரசு தொடர்ந்து கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல், கலவரக்காரர்களை கட்சிக்காரர்கள் போல ஆதரித்து வந்தால், இந்தியா அமைதி நாடாக இருக்காது என மாநில தலைவர்களும் எச்சரித்து வருகின்றனர் “