2030-ற்குள் இந்தியாவில் ரயில்கள் 100 சதவிகிதம் பசுமை ரயில்களாக மாற்றப்படும் – இந்தியன் ரயில்வே
2030-ற்குள் இந்தியன் ரயில்வேயில் செயல்படும் ரயில்கள் 100 சதவிகிதம் பசுமை ரயில்களாக மாற்றப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்து இருக்கிறது.
பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் ரயில்கள் 2030-ற்குள் முற்றிலுமாக நீக்கப்பட்டு இந்தியன் ரயில்வே முழுக்க முழுக்க பசுமை ரயில்களை இயக்கும் நிறுவனமாக 100 சதவிகிதம் மாறும் என இந்தியன் ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 2014-யை ஒப்பிடும் போது தற்போது மின்மயமாக்கல் 10 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
“ ரயில்களை மாற்றுவது போல தனிநபர்கள் வாகனங்களுக்கும் சலுகைகள் கொடுத்து மின்மயமாக்கினால் பூமி இன்னும் சொர்க்கமாகும் “