உலகின் 96 நாடுகள் அங்கீகரித்துள்ள இந்தியாவின் கொரோனோ தடுப்பூசிகள்!
உலகின் 96 நாடுகள் இந்தியாவில் உபயோகிக்கும் கொரோனோ தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் அறிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை உலகம் முழுக்க அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், பெல்ஜியம், ரஷ்யா, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 96 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிக்கை விடுத்துள்ளார்.
“ இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 110 கோடியை நெருங்கி வரும் இந்த நிலையில் உலகின் பல வளர்ந்த நாடுகள் இந்தியாவின் தடுப்பூசியை அங்கீகரித்திருப்பது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைகிறது “