21 வருடங்களுக்கு பிறகு இந்திய பெண்மணியான ஒருவருக்கு கிடைத்து இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம்!
இஸ்ரேல் எலியாட்ஸ் நகரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில், இந்திய பெண்மணியான ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் 2021 என்ற மகுடத்தை பெற்றார்.
இஸ்ரேல் எலியாட்ஸ் நகரில் மிஸ் யுனிவர்ஸ் 2021-ற்கான தேர்ந்தெடுப்பு நடைபெற்று வந்தது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற 21 வயதே ஆன பஞ்சாப் பெண்மணி ஹர்னாஸ் சந்து சிறப்பாக செயல்பட்டு மிஸ் யுனிவர்ஸ் 2021 என்ற மகுடத்தை பெற்றிருக்கிறார். லாரா தத்தாவிற்கு பிறகு 21 வருடங்கள் கழித்து, ஒரு இந்திய பெண்மணி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
” 1994-இல் சுஸ்மிதா சென், அதற்கு பின் 2000-இல் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றிருந்தனர். அதற்கு பின் தற்போது மூன்றாவது இந்தியப்பெண்மணியாக ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெற்றிருக்கிறார் “