வரும் சுதந்திர தினத்தன்று கப்பல் படையில் இணைக்கப்பட இருக்கிறது ஐஎன்எஸ் விக்ராந்த்!
INS Vikranth Soon Join In Indian Navy
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் வரும் சுதந்திர தினத்தன்று கப்பல்படையில் இணைக்கப்பட இருக்கிறது.
76 சதவிகிதம் அளவிற்கு ஒட்டு மொத்த கட்டுமானமும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகஸ்ட் 15 அன்று இந்திய கப்பல்படையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டு இருக்கிறது.
“ இந்தியா தொடர்ந்து தனது படைக்கான பலத்தை மேம்படுத்த போர்க்கல தயாரிப்புகளை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்து இருப்பது மிகப்பெரிய பலமாக அமையும் “