கடும் வெப்ப அலைக்கு இதுவரை இந்தியாவில் 54 பேர் பலி!
Due To Heavy Heat Wave In India 54 Death Registered Deatils Here Idamporul
இந்தியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 54 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வானிலை ஆய்வு மையம் வட இந்தியாவில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என எச்சரித்து இருக்கும் நிலையில், இதுவரை ஒட்டு மொத்த தேசத்தில் 54 பேர், வீசி வரும் கடும் அனல் வெப்பத்திற்கு பலியாகி இருக்கின்றனர். பீகாரில் மட்டும் 32 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ வெப்ப அலையும், அனல்காற்றும் இன்னும் கொஞ்ச நாளுக்கு நீடிக்கும் எனவே கூறப்படுகிறது, அதனால் மத்தி சமயங்களில் யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் “