இனி முறை மாமன் முறைப் பெண் திருமணத்திற்கு தடை? எங்கு? ஏன்?
முறை மாமன் மற்றும் முறைப்பெண் இடையிலான திருமணத்திற்கு தடை விதித்து இருக்கிறது ஒரு மாநிலம்.
முறை மாமன் மற்றும் முறைப்பெண் இடையிலான திருமணத்திற்கு தடை விதிக்கும் வகையில் புதிய பொது சிவில் சட்டம் ஒன்று உத்தரகாண்ட் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூடுதல் தகவல்.
” பொதுவாக ஒரே பந்தத்திற்குள்ளான திருமணங்கள், எதிர் கால சந்ததியினரை ஜீன் குறைபாடுகளுக்கு உள்ளாக்குவதாக மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. இந்த பந்த தடைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது “