கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மூன்று பேர் பலி!
Karanataka 3 Died Due To Monkey Fever Fact Here Idamporul
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு இதுவரை மூன்று பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கர்நாடகாவில் சிக்மளூர் என்ற மாவட்டத்தில் கொட்டம்மா என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்து இருக்கிறது. மேலும் ஆறு பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ தொற்றின் பரவல் அதிகமாக இருப்பதால் கர்நாடகாவைச் சுற்றி இருக்கும் மாநிலங்கள் கர்நாடக எல்லைகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து அங்கிருந்து தங்கள் மாநிலங்களுக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் “