இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைன் டாக்ஸி சவாரியை துவங்க இருக்கும் கேரள அரசு!
Online Taxi Savari From Kerala Government
இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைன் டாக்ஸி சவாரியை மாநிலம் முழுக்க துவங்க இருக்கிறது கேரள அரசு.
நாடு முழுக்க பிரைவேட்டிசம் நீடித்து வரும் இந்த வேளையில் கேரள அரசு ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கிறது. ‘கேரளா சவாரி’ எனப்படும் ஆன்லைன் வாடகை டாக்ஸியை அரசு சார்பில் மாநிலம் முழுக்க விரிவுபடுத்த இருக்கிறது. இதனால் டாக்ஸி சேவைக்கு கொள்ளை ரூபாய் ஈட்டுபவர்கள் கட்டுபடுத்தப்படுவார்கள்.
“ உபர், ஓலா என்று எல்லா மாநிலங்களிலும் தனியார் டாக்ஸிகள் ஆதிக்கம் காட்டிக் கொண்டு இருக்கும் வேளையில் அரசே டாக்ஸி சேவையை நடத்துவது என்பது வருவாயையும் ஈட்டி தரும். அதே சமயத்தில் வேலை வாய்ப்பிற்கும் வழி வகுக்கும் “