அலர்ட்: GST-யின் கீழ் வரும் குறைந்த பட்ச வரிகள் உயரப் போகிறதா?
GST-யின் கீழ் வரும் குறைந்த பட்ச வரிகள் நிதி அமைச்சகம் உயர்த்தப்படப் போவதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
GST-யின் கீழ் வரும் குறைந்தபட்ச வரிகள், வருகின்ற GST Council கூட்டத்திற்கு பிறகு உயர்த்தப்பட போவதாக மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதாவது ஐந்து சதவிகிதமாக இருக்கும் வரிகள் ஆறு சதவிகிதமாகவும், 12 சதவிகிதமாக இருக்கும் வரிகள், 13 சதவிகிதமாகவும் உயர்ததப்படும் என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
” பாமரனின் அத்தியாவசிய பொருள்கள் எல்லாம் 5 சதவிகிதம் வரியிலும், 12 சதவிகிதம் வரியிலும் அடங்கிபோய் இருக்கிறது. இந்த வரியேற்றம் எப்படியும் பணக்காரனை பாதிக்கப்போவதில்லை. பாமரனை பாதிக்காமல் இருக்கவும் போவதில்லை “