இந்தியாவில் விமான பயணத்திற்கு இனி மாஸ்க் கட்டாயம் இல்லை!
Mask Is Not Mandatory For Flight Travel Indian Aviation Sector
இந்தியாவில் இனி விமான பயணத்திற்கு மாஸ்க் கட்டாயம் இல்லை என ஒன்றிய அரசு அறிவித்து இருக்கிறது.
கொரோனா காலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்ட முக கவசம், இன்றளவும் விமான நிலையங்களிலும், விமான பயணங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வெகுவாக இந்தியாவில் குறைந்து இருப்பதால் ஒன்றிய அரசு ’விமான பயணத்தின் போது முகக்கவசம் கட்டாயம்’ என்ற விதியை தளர்த்தி இருக்கிறது.
“ மக்களுக்கு ஏற்கனவே எங்கு சென்றாலும் முக கவசம் அணிவது என்பது பழகி விட்டது. முக கவசத்தை தினம் தினம் தேடி அணிபவர்களுக்கு இந்த தளர்வு மகிழ்வை தரும் “