நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம், இடிபாடுகளில் சிக்கி 131 பேர் பலி!

Nepal Earth Quake 131 People Dead 04 11 23 Idamporul

Nepal Earth Quake 131 People Dead 04 11 23 Idamporul

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 131 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்து தரைமட்டமாகியது. தற்போது வரை இடிபாடுகளில் சிக்கி 131 பேர் பலியாகி இருக்கின்றனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதால் பலி எண்ணிக்கையும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ தேசிய பேரிடர் மேலாண்மை குழு, தீவிரமான மீட்பு பணிகளில் ஈடுபட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகிறது “

About Author