இந்தியாவிற்குள்ளும் புகுந்தது கொரோனாவின் புதிய உருமாற்ற வகையான ‘XE Variant’!
Corona New Variant XE Founded In Maharastra
இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது கொரோனாவின் புதிய உருமாற்ற வகையான ‘XE Variant’.
லண்டன், நியூசிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மெதுவாக தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது கொரோனாவின் புதிய வகையான ‘XE Variant’. இந்த நிலையில் நேற்று மஹாராஸ்டிராவில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கு ‘XE Variant’ கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த வகை வைரஸ் பற்றிய முழுமையான தகவல் எதுவும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புடனும் கவனத்துடனும் செயல்பட உலகநாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்து இருக்கிறது.
“ இந்தியாவில் நேற்று முதல் XE Variant கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில், இது நான்காவது அலையின் துவக்கமாக இருக்கலாம் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர் “