இனி UPI பணப்பரிமாற்றம் இலவசம் இல்லை! பயனர்கள் அதிர்ச்சி!
Charges For UPI Transfer From April Idamporul
இனி UPI பணப்பரிமாற்றம் இலவசம் இல்லை என்ற தகவல் வெளியாகி இருப்பது பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
வரும் ஏப்ரல் முதல் ரூபாய் இரண்டாயிரத்திற்கும் மேல் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு UPI பரிமாற்றத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்க தேசிய பணபரிவர்த்தனை மையம் அனுமதி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கட்டணம் என்ன என்பதை அந்தந்த நிறுவனங்கள் விரைவில் அறிவிக்க இருக்கிறதாம்.
“ ஒரு விடயத்தை பாமர மக்களையும் பயன்படுத்தவிட்டு பின்னர் அதற்கு கட்டணம் வசூலிக்கும் மார்க்கெட்டிங் நிலவரத்தை தற்போது அரசும் மேற்கொண்டு வருவது பயனர்களை கவலையடைச் செய்து இருக்கிறது “