ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 1,892 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
இந்தியாவில் கிட்ட தட்ட 1,892 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 568 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், டெல்லியில் 382 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், கேரளாவில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், ராஜஸ்தானில் 174 பேருக்கும், தமிழகத்தின் 121 பேருக்கும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 1,892 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
“ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்றின் விளைவால் மீண்டும் பள்ளிகளும் கல்லூரிகளும் ஆங்காங்கே மூடப்பட்டும், சில இடங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் வருவதால், மீண்டும் பழைய கோவிட் நிலை வருமோ என்ற அச்சம் நிலவி வருகிறது “