ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் மூன்றாயிரத்தை கடந்து இருக்கிறது ஒமிக்ரான் தொற்று!
Omicron Updates In India 07 01 2022
இந்தியாவில் தற்போது வரை ஒட்டு மொத்தமாக 3,007 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 876 பேருக்கும், டெல்லியில் 465 பேருக்கும், கர்நாடாகாவில் 333 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது கொரோனா தொற்றினால் இந்தியாவில் 3,71,363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசத்தில் மீட்பு விகிதம் குறைந்து தினசரி பாதிப்பு பன்மடங்காக உயர்ந்து வருகிறது.
“ மூன்றாவது அலையில் இருக்கும் தேசத்தை தொற்றினால் ஏற்படும் பெரும் இழப்பில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துவதே அவசியமாகிறது. ஆதலால் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். தன்னலம் பேணுங்கள். இந்த விடயத்தில் தன்னலமே சமூக நலம் “