இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 26 ஆக உயர்வு!
தான்சானியாவில் இருந்து வந்த மும்பை நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 26 ஆக உயர்ந்து இருக்கிறது.
மும்பை தாராவியைச் சேர்ந்த தான்சானியாவில் இருந்து வந்த 49 வயது மதிக்கத்தக்க நபருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 26 ஆக உயர்ந்து இருக்கிறது. மும்பையை பொறுத்தவரை அங்கு கண்டறியப்படும் மூன்றாவது ஓமிக்ரான் தொற்று இது ஆகும்.
உலக சுகாதார அமைப்பு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டவர்களுள் 5 சதவிகிதம் பேருக்காவது மரபணு மூலக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் நிலையில் இந்தியாவோ இன்னமும் ஒரு சதவிகிதத்தை கூட ஆய்வு செய்யவில்லை. தற்போது 26 ஆக இருக்கும் இந்த ஒமிக்ரான் தொற்று வெகு விரைவில் இன்னமும் பெரிதளவில் உயரும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
உலக நாடுகள் அனைத்தும் தென் ஆப்பிரிக்காவே ஒமிக்ரானின் தலைமையிடம் என்று சுட்டிக் காட்டினாலும், தென் ஆப்பிரிக்க அரசு சொல்வதோ எல்லா நாடுகளிலும் ஏற்கனவே ஒமிக்ரான் இருக்கிறது. நாங்கள் எங்கள் ஆய்வகத்தின் மூலம் கண்டறிந்து விட்டோம். உலக நாடுகள் இன்னமும் கண்டறியவில்லை என்ற பதிலை அளித்து இருக்கிறது
“ தென் ஆப்பிரிக்க அரசு சொல்வதும் ஒரு வகையில் உண்மை தான், எந்த வித பயண ரெக்கார்டும் இல்லாத ஒருவருக்கும் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே அனைவரும் மீண்டும் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் எழுகிறது “