ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் தற்போது வரை 4,868 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவு!
Omicron Updates In India 12 01 2022
ஒட்டு மொத்தமாக தேசத்தில் 4,868 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,281 ஒமிக்ரான் தொற்றுகளும், ராஜஸ்தானின் 645 தொற்றுகளும், டெல்லியில் 546 தொற்றுகளும், கர்நாடாகாவில் 479 தொற்றுகளும், கேரளாவில் 350 தொற்றுகளும் பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 4,868 ஒமிக்ரான் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
“ உலகளவில் உறுதி செய்யப்படும் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருந்தாலும், நமது தேசத்தில் மரபு ரீதியாக தொற்றை உறுதி செய்யும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் தொற்றைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது “