ஒமிக்ரான் நிலவரம் | ‘தற்போது வரை இந்தியாவில் 6,041 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவு’
இந்தியாவில் தற்போது வரை 6,041 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 6,041 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. தேசத்தில் 2.68 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றுகளும் பதிவாகி இருக்கிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1.42 லட்சம் தொற்றுகள் பதிவாகி இருக்கிறது.
“ உலகளவில் ஒமிக்ரான் தொற்றுகள் டெல்டாவை விட பன்மடங்கு வேகத்தில் பரவி வந்தாலும் இறப்பு விகிதம் பெரிதாய் எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது “