ஒமிக்ரான் நிலவரம் | ‘இந்தியாவில் நூறை நெருங்குகிறது ஒமிக்ரான் தொற்று’
இந்தியாவில் இன்று வரை கிட்ட தட்ட தொண்ணுற்று ஏழு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
மஹாராஷ்டிரா (32), ராஜஸ்தான் (17), டெல்லி (20), கர்நாடகா (8), குஜராத் (5), கேரளா (5), தெலுங்கானா (6) மற்றும் மேற்கு வங்கம், ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மாநிலங்களில் தலா ஒருவருக்கு தொற்றும் உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்தம் தேசத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகியிருக்கிறது.
“ வெகுவிரைவில் ஒமிக்ரான் பன்மடங்காக பரவும் தன்மை உடையதாக கருதப்படுவதால், தொற்றின் எண்ணிக்கை இன்னமும் பன்மடங்காகும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர் “