பிப்ரவரிக்குள் ஒமிக்ரான் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் | சுகாதாரத்துறை
ஒமிக்ரான் பரவல் இந்தியாவில் 107 ஆக உயர்ந்துள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 2021-ற்குள் ஒமிக்ரான் இந்தியாவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை வல்லுநர்கல் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மஹாராஸ்டிரா (40), டெல்லி (20), ராஜஸ்தான் (17), கர்நாடகா (8), தெலுங்கானா (8), குஜராத் (5), கேரளா (5) மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்கு வங்கம் மாநிலங்களில் (1) என்று 107 பேருக்கு இந்தியாவில் ஒமிரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஒமிக்ரான் பிப்ரவரியில் உச்சம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது.
“ ஒமிக்ரான் பாதிப்பை சமாளிக்க முடியாமல் திணறி வரும் வளர்ந்த நாடுகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் படி, தடுப்பூசி பெருமளவுக்கு ஒமிக்ரானை எதிர்கொள்வதாகவே தெரிகிறது. தடுப்பூசி அதிகம் எடுத்துக் கொண்ட மாகாணங்களில் பரவலும், இறப்பு விகிதமும் குறைவாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தகவல்கள் எடுத்துரைக்கின்றன “