பெருகும் ஒமிக்ரான் | இந்தியாவில் 143 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!
நாளுக்கு நாள் தேசத்தில் ஒமிக்ரான் வகை தொற்று பெருகி வருகிறது. இதுவரை இந்தியாவில் 143 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து பரவலை அதிகரித்து வரும் ஒமிக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 143 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். நாளுக்கு நாள் தொற்றின் வீரியமும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் (43), டெல்லி (22), ராஜஸ்தான் (17), கர்நாடகா (14) பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
“ நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஒமிக்ரான் பரவலை தடுத்திட மறுபடியும் ஊரடங்கை அறிவித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்பது பொறுத்து இருந்து தான் தெரியும் “